டி20 உலகக்கோப்பை முடிந்ததும் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பெறுவார் - மைக் ஹெசன்

டி20 உலகக்கோப்பை முடிந்ததும் அபிஷேக் சர்மா இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பார் என்று மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.

இந்நிலையில் இந்த ஆட்டம் மட்டுமின்றி நடப்பு ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் அபிஷேக் சர்மா டி20 உலகக்கோப்பை முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பார் என்று ஆர்.சி.பி. அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு போட்டியாக அபிஷேக் வருவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"பவர் பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. வேகத்திற்கு எதிராகவும் அவர் பெரியளவில் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். தரமான வீரரான அவர் பவுண்டரி மற்றும் சிக்சர்களை அடிக்கக் கூடியவர். எனவே உலகக்கோப்பை முடித்ததும் அவர் இந்திய அணியில் இடம்பெறுவார். குறிப்பாக ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரின் இடங்களில் அவர் மாற்றத்தை ஏற்படுத்தலாம். நியாயமாக பேச வேண்டுமெனில் இந்திய அணியில் நிறைய பெயர்கள் உள்ளன. ஆனால் அவர்களையெல்லாம் தாண்டி அபிஷேக் சர்மா இந்திய அணியில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com