அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு

4-வது 10 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அடுத்த மாதம் (ஜனவரி) 28-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை நடக்கிறது.
அபுதாபி 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கெய்ல், அப்ரிடி பங்கேற்பு
Published on

அபுதாபி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் அனுமதியுடன் அரங்கேறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மராத்தா அராபியன்ஸ் உள்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. விறுவிறுப்பு நிறைந்த இந்த போட்டியில் பங்கேற்பதை அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் (வெஸ்ட்இண்டீஸ்), அப்ரிடி, சோயிப் மாலிக் (இருவரும் பாகிஸ்தான்), வெய்ன் பிராவோ, ஆந்த்ரே ரஸ்செல், சுனில் நரின் (மூவரும் வெஸ்ட்இண்டீஸ்), திசரா பெரேரா, உதனா (இருவரும் இலங்கை) ஆகியோர் உறுதி செய்து இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த போட்டியை சோனி சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com