அழுத்தம் இருக்கிறதா? ஓபனாக சொன்ன சூர்யவன்ஷி

15 வயதே ஆன சூர்யவன்ஷி தனது அதிரடி பேட்டிங்கால் கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சூர்யவன்ஷி
Published on

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐபிஎல் 2026 சீசன் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அவர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியிருந்தாலும், தொடரின் மிகப்பெரிய நட்சத்திரமாக சூர்யவன்ஷி உருவெடுத்தார். 15 வயதான அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5 முக்கிய தனிநபர் விருதுகளை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சிறிய வயதில் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள சூர்யவன்ஷி ,

பெருமையான தருணம்

தனக்கு தற்போதே அழுத்தம் இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து சூர்யவன்ஷி கூறியதாவது: இப்போது நான் நிறைய நேர்காணல்கள் அளித்து வருவதால் ஒரு விதமான அழுத்தமும் இருக்கிறது. ஐபிஎல்லில் மதிப்புமிக்க விரர் விருதை பெற்று இருப்பது பெருமையான தருணம். அடுத்த சீசனிலும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். என் ஆட்டத்தையே நான் நம்புகிறேன். அடிக்க ஏற்ற பந்து வந்தால், முழு நம்பிக்கையுடன் அதை அடிக்க முயற்சிப்பேன்.

எனது அணுகுமுறை

அதுதான் எனது ஆட்ட முறை. அழுத்தமான சூழ்நிலைகளில் எப்படி விளையாட வேண்டும், ஒவ்வொரு போட்டியிலும் சூழ்நிலைக்கேற்ப எப்படி அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். எல்லா போட்டிகளிலும் ஒரே விதமாக விளையாட முடியாது. போட்டியின் நிலைமையைப் புரிந்துகொண்டு, அணியின் தேவைக்கேற்ப ஆட வேண்டும். இந்த சீசனில் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடங்கள் இவையே," என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com