ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் டிராட் விலகல்

ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் டிராட் விலகல்
Published on

சென்னை,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் முடிவு. அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகிறேன். என தெரிவித்தார். தனது சொந்த நாடான இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் அதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com