ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

Image Courtesy: @BCBtigers / @windiescricket
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிற்து. இதில் முதலில் நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
இந்த டி20 போட்டிகள் முடிந்ததும், ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில், இந்த ஒருநாள் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மெஹிதி ஹசன் மிராஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணி விவரம்: மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், எம்டி நைம் ஷேக், முகமது சைப் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ரிஷாத் ஹொசைன், தன்வீர் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத், தஸ்கின் அஹ்மத், சன்கிஸ்மான், மஹ்மூத், நஹித் ராணா






