ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

காபூல்,

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 27 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. அணியை முகமது நபி தலைமை தாங்குகிறார்.

தற்போது ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரை முடித்த பிறகு, ஆசியக் கோப்பைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அந்த அணி புறப்படும்.

ஆசிய கோப்பை டி20 கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விபரம்:- முகமது நபி (கே), நஜிபுல்லா ஜத்ரான், அஃப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், பரித் அஹ்மத் மாலிக், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய், ஹஸ்ரத்துல்லாஹ் ஜசாய் உர் ரஹ்மான், நஜிபுல்லா சத்ரான், நவீன் உல் ஹக், நூர் அகமது, ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான் மற்றும் சமியுல்லா ஷின்வாரி.

நிஜாத் மசூத், கைஸ் அஹ்மத் மற்றும் ஷரபுதீன் அஷ்ரஃப் ஆகிய மூன்று வீரர்கள், கூடுதல் வீரர்களாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com