‘ஆப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும்’ - கும்பிளே கணிப்பு

ஆப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும் என கும்பிளே தெரிவித்துள்ளார்.
‘ஆப்கானிஸ்தான் அணி அச்சுறுத்தும்’ - கும்பிளே கணிப்பு
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே அளித்த ஒரு பேட்டியில், இந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி, குறிப்பிட்ட சில அணிகளுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் அளிக்கும். கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அந்த அணி 2-வது இடத்தை பிடித்தது. லீக் சுற்றில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் (டை) செய்தது. பாகிஸ்தான், வங்காளதேச அணிகளை மிரட்டியது. அந்த அணி வீரர்கள் உலகம் முழுவதும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். அதன் மூலம் தான் ஆப்கானிஸ்தான் அணி முன்னேற்றம் கண்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் ஹீரோவாக திகழ்கிறார். முகமது நபி அற்புதமான ஆல்-ரவுண்டர். முஜீப் ரகுமானும் சிறப்பாக சுழற்பந்து வீசக்கூடியவர். பேட்டிங்கில் அந்த அணி 250-260 ரன்கள் எடுத்து விட்டால், அது எதிரணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com