16 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த பொல்லார்ட்


After 16 years, Pollard suffers a defeat... Desert Vipers win the trophy for the first time
x
தினத்தந்தி 6 Jan 2026 7:41 AM IST (Updated: 6 Jan 2026 1:05 PM IST)
t-max-icont-min-icon

16 வருடம் கழித்து பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் பைனலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் 2025/26 சர்வதேச லீக் டி20 பிரீமியர் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் இறுதிப்போட்டியில் டெசர்ட் வைப்பர்ஸ் மற்றும் எம்ஐ எமிரேட்ஸ் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெசர்ட் அணி 20 ஓவரில் 182/4 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் சாம் கரண் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74* (51) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் பகார் ஜமான் 20, மேக்ஸ் ஹோல்டன் 41, டான் லாரன்ஸ் 23 ரன்கள் எடுத்தார்கள். எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக பரூக்கி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு, வைப்பர்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்-பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது. நடுவரிசையில் ஷகிப் அல் ஹசன் (36) மற்றும் பொல்லார்ட் (28) ஆகியோர் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துச் சற்று ஆறுதல் அளித்தாலும், வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர்.

இதன் காரணமாக எம்.ஐ.எமிரேட்ஸ் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களில் ஆல் அவுட்டானது, டெஸர்ட் வைபர்ஸ் அணி தரப்பில் டேவிட் பெய்ன் மற்றும் நஷீம் ஷா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் டெஸர்ட் வைபர்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தனது முதல் கோப்பையை முத்தமிட்டது.

அதன் காரணமாக 2010க்குப்பின் தொடர்ந்து 13 வெற்றிகளுக்குப் பின் முதல் முறையாக பொல்லார்ட் ஒரு டி20 தொடரின் பைனலில் தோல்வியை சந்தித்துள்ளார். கடைசியாக 2010 ஐபிஎல் பைனலில் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பைக்காக தோற்ற அவர் 16 வருடங்கள் கழித்து இப்போட்டியில் தோற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story