தோனியைத் தொடர்ந்து விராட் கோலியையும் விமர்சித்துள்ள ஹர்ஷா கோயங்கா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஹர்ஷா கோயங்கா மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தோனியைத் தொடர்ந்து விராட் கோலியையும் விமர்சித்துள்ள ஹர்ஷா கோயங்கா
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது தோனியை கடுமையாக விமர்சித்து தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்த தொழில் அதிபர் கோயங்கா, தற்போது விராட் கோலி மீது தன் கவனத்தை திருப்பியுள்ளார். புனே சூப்பர்கிங்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவின் சகோதரரான ஹர்ஷா கோயங்கா, தற்போது பயிற்சியாளர் விவகாரத்தில் விராட் கோலியை விமர்சித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷா கோயங்கா, விராட் கோலி-கும்பிளே மோதல் குறித்து கூறியிருப்பதாவது:- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தயவு கூர்ந்து விண்ணப்பியுங்கள். தகுதிகள் என்னவெனில், பயண விவரத்தை ஒழுங்குபடுத்துதல், ஓட்டல் அறை புக் செய்தல், பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் கேப்டன் ஆகியோருக்கு கீழ்படிந்து நடப்பது உள்ளிட்டவை ஆகும் என தெரிவித்து உள்ளர்.

இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அனில் கும்பிளே கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். விராட் கோலியுடனான ஏற்பட்ட முரண்பாடே அனில் கும்பிளேவின் பதவி விலகலுக்கு காரணம் என்று கூறப்பட்டதால், விராட் கோலி சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com