சச்சினுக்கு பிறகு....தோனிக்கு தான் இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது..! பொல்லார்ட் புகழாரம்

மும்பை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான கைரன் பொல்லார்டு , தோனிக்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசியுளளார்.
Image Courtesy : Chennai Super Kings Twitter 
Image Courtesy : Chennai Super Kings Twitter 
Published on

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-மும்பை மோதல் என்றாலே எப்போதும் அனல் பறக்கும். ரசிகர்களின் ஆர்வமும் எகிறும். இந்த ஆட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்விரு அணிகளும் இதுவரை 34 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 20-ல் மும்பையும், 14-ல் சென்னையும் வெற்றி கண்டன.

இந்த நிலையில் மும்பை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான கைரன் பொல்லார்டு , தோனிக்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசியுளளார்.

இது குறித்து அவர் கூறியதாவது ,

தோனி எங்கு சென்றாலும் அவருக்கு உள்ளூர் ஆதரவு போல , ரசிகர்களின் ஆதரவு இருக்கும் . ஏனென்றால் அவர் அணிக்காக அவ்வளவு செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய அடையாளமான சச்சின் தெண்டுல்கர் இருந்தபோது நாங்கள் அந்த ஆதரவை உணர்ந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் எங்களுக்கு அந்த ஆதரவு இருந்தது. என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com