இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அஸ்வின் - குல்தீப் இடையே நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் வீரர்கள் அனைவரும் ஓய்வறைக்கு திரும்பினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பவுலர் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றினால் அந்த இன்னிங்சில் வீசப்பட்ட பந்தை ரசிகர்களிடம் காண்பித்து செல்லுவது கவுரமானதாக கருதப்படும்.

அதன்படி இந்த இன்னிங்சில் அதிக விக்கெட் கைப்பற்றிய குல்தீப் யாதவ் அந்த பந்தை, தான் காண்பித்து செல்லாமல் இன்று 100-வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வினிடம் கொடுத்தார். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த அஸ்வின், குல்தீப் யாதவிடமே கொடுத்தார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அஸ்வின் - குல்தீப் யாதவ் இடையே நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com