தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி மிதாலி, மந்தனா அரைசதம் அடித்தனர்

இந்தியா – தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி மிதாலி, மந்தனா அரைசதம் அடித்தனர்
Published on

ஈஸ்ட் லண்டன்,

இந்தியா தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் போட்டி ஈஸ்ட் லண்டனில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 142 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மிதாலிராஜ் (8 பவுண்டரியுடன் 76 ரன், நாட்அவுட்), மந்தனா (4 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்) அரைசதம் அடித்தனர்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 20 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3வது 20 ஓவர் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. நடக்கிறது. இதற்கிடையே, எஞ்சிய மூன்று ஆட்டங்களையும் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com