தலைமை தேர்வாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பாத அஜித் அகர்கர்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமை தேர்வாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பாத அஜித் அகர்கர்
Published on

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விருப்பமில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் அகர்கரின் தற்போதைய பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்பதை அவர் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித் அகர்கர் பதவியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஆடவர் அணியின் தேர்வுக்குழு தொடர்பான முடிவுகளை எடுக்க வாரிய நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அஜித் அகர்கரை தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதா அல்லது புதிய தலைமை தேர்வாளரை நியமிப்பதா என்பது பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com