அகிப் நபி இந்திய அணியில் இடம் பிடிப்பார்: கங்குலி

ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  
அகிப் நபி இந்திய அணியில் இடம் பிடிப்பார்: கங்குலி
Published on

ஹூப்ளி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா- ஜம்மு காஷ்மீர் அணிகள் இடை யிலான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்று வருகிறது.இதில் முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி தொடக்க நாளில் 2 விக்கெட்டுக்கு 284 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜம்மு-காஷ்மீர் அணி வலுவான நிலையை எட்டியது. சுபம் பண்டிர் 121 ரன்னிலும் (247 பந்து, 12 பவுண்டரி, 2 சிக் சர்), அப்துல் சமத் 61 ரன்னிலும், கன்ஹையா வாதவன் 70 ரன்னிலும், பராஸ் டோக்ரா 70 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஜம்மு காஷ்மீர் 584 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழ்ந்தது. கர்நாடகா அணியில் சிறப்பாக பந்துவீசி பிரசித் கிரிஷ்னா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து கர்நாடகா அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். மூன்றாம் நாள் முடிவில் கர்நாடக அணி 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் 4-ம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய மயங்க் 160 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கிருத்திக் கிருஷ்ணா 36 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் கர்நாடகா அணி 93.3 ஓவரில் 293 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஜம்மு அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தரப்பில் அகிப் நபி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இந்த போட்டியின் கடைசி நாளில் ஜம்மு காஷ்மீர் அணி விளையாடி வருகிறது.இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நடப்பு ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மொத்தம் 60 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ள ஜம்மு- காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி அசத்தியுள்ளார் .

இந்த நிலையில் விரைவியில் அகிப் நபிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலி தனது எக்ஸ் பக்கத்தில், 'தேசிய அணி யின் சீருடையை அணியும் வழியில் அகிப் நபி. அதற்கு கோடையில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் சரியான இடம்' என்று குறிப் பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com