

சென்னை,
எம்.சி.சி. முருகப்பா தங்கக் கோப்பைக்கான 97-வது அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று முதல் நவம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரெயில்வே, இந்திய ராணுவம், இந்தியன் ஆயில் நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கி, கர்நாடகா அணிகளும், 'பி' பிரிவில் இந்திய கடற்படை, மலேசிய ஆக்கி சம்மேளன ஜூனியர். சாய் (போபால்), பாரத் பெட்ரோலியம், தமிழ்நாடு அணிகளும் இடம் பிடித்துள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரி வில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ.7 லட்சமும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். அரைஇறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும். இதுதவிர சிறந்த முன்கள வீரர், நடுகள வீரர், கோல்கீப்பர். வளர்ந்து வரும் இளம் வீரர், இறுதிப்போட்டி யில் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், நவீன சைக்கிள் வழங்கப் படும்.
தினசரி போட்டிகள் மாலையில் தொடங்கி மின்னொளியில் நடைபெறும். சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 20 மரக்கன்றுகள் நடும் திட்டம் இந்த ஆண்டும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் தமிழ்நாடு- சாய் (மாலை 4.15 மணி), இந்திய ராணுவம்-கர் நாடகா (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.
இந்த தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளர் ராஜீவ் ரெட்டி தெரிவித்தார்.