2023 உலகக் கோப்பை வரை ஆலன் டொனால்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு - வங்காளதேச கிரிக்கெட் வாரியம்...!

2023 உலகக் கோப்பை வரை ஆலன் டொனால்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
2023 உலகக் கோப்பை வரை ஆலன் டொனால்டின் ஒப்பந்தம் நீட்டிப்பு - வங்காளதேச கிரிக்கெட் வாரியம்...!
Published on

டாக்கா,

வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் எதிர்வரும் 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை வரையில் இருப்பார் என வங்களாதேசம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக டொனால்ட் நியமிக்கப்பட்டார். இவரது ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பை வரை இருந்தது. பின்னர் பிசிபி தனது ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் வரை நீட்டித்தது.

இந்தியாவுக்கு எதிராக வங்காள தேச அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் டொனால்டின் ஒப்பந்தம் உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பிசிபி கிரிக்கெட் இயக்கத் தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com