யார் என்று தெரியாமல் ஸ்டெயினுக்கு பந்து வீச கற்றுக்கொடுத்த அமெரிக்க பயிற்சியாளர் - வைரலாகும் வீடியோ

யார் என்று தெரியாமல் ஸ்டெயினுக்கு பந்து வீச கற்றுக்கொடுக்கும் அமெரிக்க பயிற்சியாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

நியூயார்க்,

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அது மட்டும் அல்லாமல் 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டி20 உலகக்கோப்பை நடைபெறும் சமயத்தில் கிரிக்கெட்டை அமெரிக்கர்கள் கற்றுக் கொள்வதற்காக பல்வேறு ஏற்பாடுகளை ஐசிசி செய்துள்ளது. அதன்படி அங்கு வரும் அமெரிக்கர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்று சொல்லித் தர சில பயிற்சியாளர்களை ஐசிசி நியமித்துள்ளது. மேலும் பேட்டிங் எப்படி செய்வது என்றும் சில பயிற்சியாளர்கள் அங்கு வரும் அமெரிக்கர்களுக்கு சொல்லித் தருகிறார்கள்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் பந்து வீச்சாளர் ஸ்டெயின் அங்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கு இருந்த பயிற்சியாளர் இது ஸ்டெயின் என்று தெரியாமல் அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று சொல்லிக் கொடுக்கிறார். அதை பார்த்து ஸ்டெயினும் பந்து வீசுகிறார். அப்போது ஸ்டெயின் எப்படி பந்து வீசுவது என்று சில சந்தேகங்களையும் அவரிடம் கேட்கிறார். இதற்கு அவரும் பதில் சொல்லிக் கொடுத்திருக்கிறார். கடைசி வரை அந்த வீடியோவில்தான் யார் என்று ஸ்டெயின் வெளிப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com