

பெங்களூரு,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்தவரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்பிளே இன்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதையடுத்து, அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சச்சின் தெண்டுல்கர், ஹர்பஜன்சிங், விவிஎஸ் லஷ்மன், சேவாக், சுரேஷ் ரெய்னா, ஆகாஷ் சோப்ரா, முகம்மது கைப், அனுராக் தாகூர், உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டர் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.