அனிருத் இசையில் டி20 உலக கோப்பை தொடருக்கான பாடல் வெளியீடு

இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அனிருத் இசையில் டி20 உலக கோப்பை தொடருக்கான பாடல் வெளியீடு
Published on

சென்னை,

2026 டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக அனிருத் கூறியதாவது,

கிரிக்கெட் சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான திரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஐசிசி உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வ பாடல் விரைவில் வரும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com