இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அன்கித் ராஜ்புட்

Image Courtesy: @IPL / X (Twitter)
இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அன்கித் ராஜ்புத் இன்று அறிவித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்கித் ராஜ்புத் (வயது 31). இவர் ஐ.பி.எல் தொடரில் 29 ஆட்டங்களில் ஆடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் உத்தர பிரதேச அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அன்கித் ராஜ்புத் இன்று அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்காததால் அவர் ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகளில் இடம் பெற்றுள்ளார். இவரது ஓய்வு முடிவு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story






