கணுக்காலில் ஏற்பட்ட காயம்: நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் குணமடைய 8 வாரங்கள் ஆகும் - டாக்டர்கள் தகவல்

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து வீரர் கிரான்ட்ஹோம் குணமடைய 8 வாரங்கள் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான காலின் டி கிரான்ட்ஹோம் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு சர்வதேச போட்டியில் இருந்து விலகி இருக்கிறார்.

ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடினார். இந்த நிலையில் அவருக்கு வலது கணுக்காலில் ஆபரேஷன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து அவர் களம் திரும்ப 6-8 வாரங்கள் பிடிக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஜூன் 2-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் சவுத்தாம்டனில் ஜூன் 18-ந் தேதி ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அவர் இடம் பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com