இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகல்

இந்தியா-கவுண்டி செலக்ட் லெவன் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் டர்ஹாமில் நடந்தது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து காயத்தால் வாஷிங்டன் சுந்தர் விலகல்
Published on

இதில் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக கவுண்டி லெவன் அணிக்காக களம் இறங்கிய இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 2-வது நாளில் பேட்டிங் செய்த போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்து கைவிரலில் தாக்கியது. இதில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காயம் குணமடைய குறைந்தபட்சம் 5 வாரம் பிடிக்கும் என்பதால் அவர் வருகிற 4-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதேபோல் இந்த போட்டியில் எதிரணிக்காக ஆடிய இந்திய வலைப்பயிற்சி பவுலர் அவேஷ்கான் பெருவிரலில் காயம் அடைந்தார். காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர், அவேஷ்கான் இருவரும் நாடு திரும்ப இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com