

சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது
காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை அணியின் அதிரடி வீரரான டேவால்ட் பிரேவிஸ் காயம் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அணி நாளை தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.