இலங்கை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்

சர்வதேச கிரிக்கெட்டில் 8,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்
Published on

கொழும்பு,

இலங்கை முன்னாள் கேப்டன், 1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியின் முக்கிய வீரருமான ஹஷான் திலகரத்னே,சீனியர் ஆண்கள் இலங்கை அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 59 வயதான திலகரத்னே, நேற்று முதல் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை அணிக்காக 83 டெஸ்ட் மற்றும் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள திலகரத்னே, சர்வதேச கிரிக்கெட்டில் 8,000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த அவர், தனது அனுபவம் மூலம் தற்போதைய வீரர்களின் செயல்திறனை மேம்படுத்தும் முக்கிய பொறுப்பை ஏற்கிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com