இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம் - வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை பாயுமா?

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது.
இலங்கை வீரர்களுடன் வாக்குவாதம் - வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை பாயுமா?
Published on

தம்புல்லா,

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷி மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

போட்டி டை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை-ஏ அணியுடன் இந்தியா-ஏ அணி மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியும் 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்களை எடுத்தது. இதனால், போட்டி டை(சமன்) ஆனது.

சூப்பர் ஓவர்

இதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. முதலில் பேடிங் செய்த இலங்கை-ஏ அணி 16/0 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய ஏ அணி 9/0 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

நடவடிக்கை பாயுமா?

வெற்றி பெற்றநிலையில், இலங்கை வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இலங்கை வீரர் விஷின் ஹலம்பட்ஜ், வார்த்தைகளை விட்டதாக தெரிகிறது. இதனால் சூர்யவன்ஷி கோபமடைந்து, வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இலங்கை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக வைபவ் சூர்யவன்ஷிக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவிகிதம் அபராதம் அல்லது டீமெரிட் புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. 24 மாதத்திற்குள் 4 டீமெரிட் புள்ளிகள் வாங்கும் வீரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com