அர்ஜூன் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? - ரோகித் சர்மா பதில்

நடப்பு ஐ.பி.எல். தொடரிலாவது அர்ஜூன் தெண்டுல்கர் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார்.
கோப்புப்படம் ANI
கோப்புப்படம் ANI
Published on

மும்பை,

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த 2 ஆண்டுகளாக இடம் பெற்றுள்ளார். இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவர் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. நடப்பு தொடரிலாவது அவர் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகமாக சாத்தியமுள்ளதா என்று ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ' இது நல்ல கேள்வி. நம்புகிறேன்' என்று ஒற்றை வரியில் பதில் அளித்தார்.

இது குறித்து பயிற்சியாளர் பவுச்சர் கூறும் போது, 'அர்ஜூன், காயத்தில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்துள்ளார். எனவே பயிற்சியில் அவரது செயல்பாடுகளை கவனிப்போம். உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 6 மாதங்களாக சிறப்பாக பந்து வீசி வருவதாக நினைக்கிறேன். எனவே முழு உடல்தகுதியுடன் அணித்தேர்வுக்கு தயாராக இருந்தால் அவரது பெயரை பரிசீலிப்போம்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com