இந்தியா- தென்ஆப்பிரிக்கா ஆட்டத்தை மெரினாவில் பார்க்க ஏற்பாடு

தற்போது 'சூப்பர்8' சுற்று நடைபெற்று வருகிறது
இந்தியா- தென்ஆப்பிரிக்கா ஆட்டத்தை மெரினாவில் பார்க்க ஏற்பாடு
Published on

ஆமதாபாத்,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 20 அணி கள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த அணிகள் 'சூப்பர்' சுற்றுக்கு முன்னேறின. 'சூப்பர்' சுற்றுக்கு வந்துள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டி தொடரில் தற்போது 'சூப்பர்8' சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இரவு 7 மணிக்கு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஆட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிக்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்டமான எல்.இ.டி. திரையில் ஒளி பரப்பு செய்ய சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரை பரப்பில் அமைக்கப்பட் டுள்ள அகன்ற திரையில் பார்த்து ரசிக்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com