அடிலெய்டு டெஸ்டில் பிராட், ஆண்டர்சன் விளையாடுவர்: தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு

அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது ஆஷஸ் டெஸ்டில் பிராட், ஆண்டர்சன் விளையாடுவார்கள் என இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் தோல்விக்கு அந்த அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாக செயல்பட்டு வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் அணியில் இல்லாததே காரணம் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. பகல்-இரவு போட்டியாக நடைபெற இருக்கும் இந்த போட்டியில் பிராட் மற்றும் ஆண்டர்சன் விளையாடுவார்களா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்து தலைமை பயிற்சியாளர் சில்வர் வுட் கூறுகையில், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். அடிலெய்டு டெஸ்டில் இருவரும் விளையாடுவார்கள். அவர்கள் தற்போது பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். என்று சில்வர் வுட் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com