ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸி.அணி அறிவிப்பு.. முன்னணி வீரர்களுக்கு இடமில்லை

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது.
ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸி.அணி அறிவிப்பு.. முன்னணி வீரர்களுக்கு இடமில்லை
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி காபா மைதானத்தில் வருகிற 4-ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக முன்னணி வீரர்களான கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் இந்த போட்டியிலும் இடம்பெறவில்லை.

அதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தே இந்த போட்டியிலும் கேப்டனாக தொடர்கிறார் அத்துடன் முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களே 2-வது போட்டிக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷ்சேன், நாதன் லயன், மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com