டெஸ்டில் ஓர் ஆண்டில் அதிக ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை

டெஸ்டில் இந்த ஆண்டில் இதுவரை 1606 ரன்கள் எட்டுத்துள்ளார்.
டெஸ்டில் ஓர் ஆண்டில் அதிக ரன்கள்: ஜோ ரூட் புதிய சாதனை
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் நடந்துவரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்.

அவர் இந்த ஆண்டில் இதுவரை 14 டெஸ்டில் விளையாடி 6 சதம், 3 அரைசதம் உள்பட 1,606 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓர் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன் மைக்கேல் 1484 எடுத்ததே ஓர் ஆண்டில் டெஸ்டில் இங்கிலாந்து பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. மேலும் சர்வதேச அளவில் ஓராண்டில் 1,600 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்த சாதனை பட்டியலில் பாகிஸ்தானின் முகமது யூசுப் முதலிடத்திலும் (2006-ம் ஆண்டில் 1,788 ரன்), வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் 2-வது இடத்திலும் (1976-ம் ஆண்டில் 1,710 ரன்), தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (2008-ம் ஆண்டில் 1,656 ரன்) 3-வது இடத்திலும் உள்ளனர்.

முகமது யூசுப்பின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு இன்னும் 183 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ஆண்டில் அவர் இன்னும் குறைந்தது 3 இன்னிங்சில் விளையாட வேண்டி வரும். அதற்குள் இச்சாதனையை நிகழ்த்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com