ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய கேப்டன் விலகல்


ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய கேப்டன் விலகல்
x

image courtesy:ICC

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி விட்டது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிந்துள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற 26-ம் தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 4-ம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார். முதுகு வலி காயம் காரணமாக முதல் 2 போட்டிகளை தவறவிட்ட கம்மின்ஸ் கடந்த போட்டியில் மட்டுமே ஆடினார்.

இந்த சூழலில் தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

1 More update

Next Story