ஹர்திக் பாண்டியா போன்ற வீரரை பாகிஸ்தான் அணி கண்டுபிடிக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து

குரூப் சுற்றில் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
Image Courtesy: Twitter @hardikpandya7
Image Courtesy: Twitter @hardikpandya7
Published on

சென்னை,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) போட்டி தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற குரூப் சுற்று போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 20 ஓவர் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி மேலும் வளர ஹர்திக் பாண்டியா போன்ற தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை பாகிஸ்தான் அடையாளம் காண வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆகிப் ஜாவேத் கூறியதாவது:

"இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தானுக்கு அப்படி ஒரு ஆல்-ரவுண்டர் இல்லை. பாகிஸ்தானுக்கு அப்துல் ரசாக் இருந்ததைப் போல அவர் திறமையானவர்.

எனவே பாகிஸ்தான் டி20-களில் வளர விரும்பினால், அவர்கள் ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்-ரவுண்டரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் 20 ஓவர் போட்டிகளில் உங்களிடம் எத்தனை ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர் என்பது மிக முக்கியம். அந்த வகையில் இந்தியாவிற்கு ஜடேஜா, பாண்டியா மிக பெரிய பலம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com