ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு : ஆகஸ்ட் 28-யில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதல்

சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
Image Courtesy : ICC 
Image Courtesy : ICC 
Published on

மும்பை,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை , வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்குகிறது. தகுதிச் சுற்றுக்குப் பிறகு மேலும் ஒரு அணி போட்டியில் இணையும். ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது.

இலங்கையில் நடைபெற இருந்த இந்த தொடர் பின்னர் அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி 6-வதாக தகுதி அடையும் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது.

சாம்பியனை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com