ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர் விலகல்


ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர் விலகல்
x

Image Courtesy: @ACBofficials

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

துபாய்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன் உல் ஹக்குக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வருவதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த அப்துல்லா அஹ்மத்சாய் முதன்மை அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story