ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? வெளியான தகவல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ம் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? வெளியான தகவல்
Published on

துபாய்,

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத்தொகை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த சீசனை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 3-வது மற்றும் 4-வது இடங்களை பெறும் அணிகளுக்கும் பரிசுத்தொகை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com