ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் இடம்..?

image courtesy:ICC
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.13-ம் தேதி வங்காளதேசத்துடன் மோதுகிறது.
கொழும்பு,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா இடம்பெற்றுள்ளார்.
இலங்கை அணி விவரம்:
சரித் அசலன்கா (கேப்டன்), குசல் மென்டிஸ், குசல் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், கமில் மிஷார, தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லலாலகே, சாமிக்க கருணாரத்னே, தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷாரா, மதீஷா பதிரனா.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.13-ம் தேதி வங்காளதேசத்துடன் மோதுகிறது.






