ஆசிய கோப்பை: ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பதில் சிக்கல்..?


ஆசிய கோப்பை: ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பதில் சிக்கல்..?
x

ஆசிய கோப்பை தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்படுகிறது.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை நிறைவடைந்தவுடன் இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

அந்த தொடருக்கு பும்ர உடற்தகுதி உடன் இருப்பது அவசியம். எனவே அதனை கருத்தில் கொண்டு ஆசிய கோப்பை தொடரில் பும்ராவுக்கு ஓய்வளிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story