இன்று வெளியாகும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை...? - இந்தியா-பாகிஸ்தான் செப்-2ல் மோத வாய்ப்பு...!

ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று இரவு 7.45 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இன்று வெளியாகும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை...? - இந்தியா-பாகிஸ்தான் செப்-2ல் மோத வாய்ப்பு...!
Published on

லாகூர்,

ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற உள்ளது. முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பையில் இந்தியா கலந்து கொள்ளாது என்றதால் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடரில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை இன்று இரவு 7.45 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆசிய கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் சாம்பியன் கோப்பை இரவு 7.15 மணிக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிகிறது.

போட்டி அட்டவணையில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் முல்தானில் ஆகஸ்ட் 30 அல்லது 31 -ம் தேதி மோத உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் செப்டம்பர் 2 அன்று இலங்கையின் டம்புலா அல்லது கேண்டியில் நடைபெறும் எனவும், சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தானுக்கான ஆட்டம் செப்டம்பர் 10ல் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com