ஆசிய கோப்பை தொடர்; மனதளவில் அமைதியை ஏற்படுத்த நெருப்பு மீது நடந்து பயிற்சி எடுக்கும் வங்கதேச வீரர்...!

6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடர்; மனதளவில் அமைதியை ஏற்படுத்த நெருப்பு மீது நடந்து பயிற்சி எடுக்கும் வங்கதேச வீரர்...!
Published on

டாக்கா,

6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் உச்சகட்டமாக வங்கதேச தொடக்க வீரர் முகமது நைம் இந்த ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடுவதற்காக நெருப்பு மீது நடந்து வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நெருப்பு மீது நடப்பது மனதளவில் அமைதியை ஏற்படுத்தும் என்பதால் அந்த வகையான பயிற்சியை அவர் பயிற்சியாளர் வழிகாட்டுதலுடன் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 3 முதல்  5 அடி நீளத்திற்கு நெருப்பை மூட்டி அதில் முகமது நைம் கூலாக நடந்து சென்று பயிற்சிகளை எடுத்த போது அவருடைய பயிற்சியாளர் கைதட்டி பாராட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன் எத்தனையோ பயிற்சிகளை பார்த்துள்ளனர். ஆனால், இப்படி ஒரு புதுமையான பயிற்சியை வங்கதேச வீரர்கள் மேற்கொள்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com