ஆசிய கோப்பை: ஜிதேஷ் - சாம்சன் இருவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் ..? முன்னாள் வீரர் தேர்வு


ஆசிய கோப்பை: ஜிதேஷ் - சாம்சன் இருவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் ..? முன்னாள் வீரர் தேர்வு
x

ஜிதேஷ் ஏறக்குறைய ஒராண்டுக்குப்பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வரும் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் செப்.10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தையும், 14-ந்தேதி பாகிஸ்தானையும், 19-ந்தேதி ஓமனையும் எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2-வது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜிதேஷ் ஏறக்குறைய ஒராண்டுக்குப்பின் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த ஜிதேஷ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக பினிஷர் ரோலில் கச்சிதமாக செயல்பட்ட அவர் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு இந்திய அணியில் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

சமீப காலமாக இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் களமிறங்கி வருகிறார். ஆனால் சுப்மன் கில் மீண்டும் டி20 அணிக்கு கம்பேக் கொடுத்ததோடு மட்டுமின்றி துணை கேப்டன் பதவியையும் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவரே அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சஞ்சு சாம்சன் பின்வரிசையில் விளையாடும் வாய்ப்பை பெறுவாரா? அல்லது பினிஷிங் ரோலில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜிதேஷ் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஜிதேஷ் சர்மாதான் விளையாட வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- ஜிதேஷ் சர்மா ஆசிய கோப்பையில் விளையாடுவார் என்று நினைக்கிறேன். முதல் 3 இடங்களைப் பற்றி நாம் அதிகம் யோசிக்கக்கூடாது, ஏனென்றால் அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்காது. இருப்பினும், 4 முதல் 7 வரையிலான இடங்களில் அவரது எண்ணிக்கை மிகவும் சிறப்பாகிவிட்டது.

அவரது ஸ்ட்ரைக் ரேட் 166 மற்றும் சராசரி 28. ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் உள்ள வீரர் அவர்தான். எனவே பேட்டிங் ஆர்டர் தயாரிக்கப்பட்டதும், அவர் விக்கெட் கீப்பரில் முதலிடத்திற்குச் செல்வார். ஜிதேஷ் சர்மாவின் எண்கள் மற்ற அனைவரையும் விட சிறந்ததாகத் தெரிகிறது. அவர் பிரகாசமாக ஜொலிக்கிறார். அவருக்கு ஒரு நல்ல ஆசிய கோப்பை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

1 More update

Next Story