ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி; இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
Published on

துபாய்,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் சூப்பர்-4 சுற்றில் துபாயில் இன்று அரங்கேறும் முக்கியமான ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதனை அடுத்து விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் உல் ஹக் (10), பகர் (31) ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து அசாம் (9), சர்ப்ராஸ் அகமது (44), சோயீப் மாலிக் (78), ஆசிப் அலி (30) மற்றும் சதாப் கான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஹசன் அலி (2), முகமது நவாஸ் (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் இறுதியில் 50 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 238 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com