ஆசிய விளையாட்டு போட்டிகள்: மகளிர் கிரிக்கெட்டில் 51 ரன்களில் சுருண்ட வங்காளதேசம்

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வங்காளதேச அணி 51 ரன்கள் எடுத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: மகளிர் கிரிக்கெட்டில் 51 ரன்களில் சுருண்ட வங்காளதேசம்
Published on

ஹாங்சவ்,

ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் சீனாவின் ஹாங்சவ் நகரில் நடந்து வருகிறது. இதில், அரையிறுதியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது.

இதன்படி, அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஷாதி ராணி மற்றும் ஷமீமா சுல்தானா இருவரும் விளையாடினர். தொடக்க பந்திலேயே இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இந்த போட்டியில், கேப்டன் நிகர் சுல்தானா அதிக அளவாக 12 ரன்கள் எடுத்துள்ளார். மற்ற வீராங்கனைகளில் சோபனா (8), ரித்து மோனி (8), ரபியா கான் (3), கட்டூன் (3) ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நஹிடா அக்தர் (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

17.5 ஓவர்களில் மொத்தம் 51 ரன்கள் எடுத்த நிலையில், வங்காளதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து, 20 ஓவர்களில் 52 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது.

இந்தியா தரப்பில் 5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 7 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார். ஷெபாலி வர்மா (9), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (1) ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com