ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தேர்வு செய்த ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

மும்பை,

சீனாவில் வருகிற செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெற இருப்பதால் இரண்டாம் தர இந்திய ஆண்கள் அணியே ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறது. அதே நேரத்தில் முன்னணி வீராங்கனைகள் அடங்கிய வலுவான இந்திய பெண்கள் அணி பங்கேற்கிறது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஆண்கள் கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இவர்கள் தான் இருக்க வேண்டும் என நினைப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

அவர் ஆசிய விளையாட்டு போட்டிக்கான ஆண்கள் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்துள்ளார். அதில் ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஷிகர் தவானை கேப்டனாக அனுப்ப வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளி வந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஷிகர் தவானுக்கு இடம் இல்லை.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும்போது ,

உலக கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்வாட்டுக்கு இடம் இருக்காது. ஏற்கனவே சுப்மன் கில், ரோகித் சர்மா, இஷன் கிஷன் அந்த வரிசையில் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக ஸ்ரேயஸ் அய்யர், கோலி உள்ளனர். அதனால் ஆசிய விளையாட்டு போட்டிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டை தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்கிறேன்.

2வது தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்கிறேன். அதற்கு அடுத்த படியாக 3வது இடத்துக்கு இளம் வீரர் திலக் வர்மாவை தேர்வு செய்கிறேன். அந்த இடத்துக்கு சாய் சுதர்சனும் உள்ளார். ஆனால் நான் திலக் வர்மாவை தேர்ந்தெடுக்கிறேன். அவர் சிறிது பவுலிங்கும் செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com