ஆசிய விளையாட்டு: இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு: இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on: 

டோக்கியோ,

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெற்ற அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் அபிஷேக் சர்மா , சஞ்சு சாம்சன் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் 37 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து இஷான் இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். நிலைத்து விளையாடிய அவர் அரைசதம் அடித்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய இலங்கை பேட்ஸ்மேன்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.

இதனால் இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா , அக்சர் படேல் , அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனால் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.ஆசிய விளையாட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com