ஆசிய விளையாட்டு: வங்காளதேச அணியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இலங்கை

வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆசிய விளையாட்டு: வங்காளதேச அணியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இலங்கை
Published on: 

டோக்கியோ,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது.2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற கிரிக்கெட்டில் வெண்கலப் பத்தகத்துக்கான போட்டியில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் தரிந்து ரத்நாயகே நிலைத்து விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதம் அடித்தார்.கேப்டன் சஹான் அரச்சிகே 33 ரன்கள் எடுத்தார்.

இதனால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய வங்காளதேச அணி தடுமாறியது. வங்காளதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் வங்காளதேச அணி 17.3 ஓவர்களில் 102 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி வெண்கலம் வென்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com