ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்


ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 15 July 2025 9:30 AM IST (Updated: 15 July 2025 9:31 AM IST)
t-max-icont-min-icon

4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது.

துபாய்,

4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது அணிகள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறது. அந்த வகையில் 4வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இரு அணிகள் வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஆஸ்திரேலியா (100 சதவீதம்) முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து (66.67சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (66.67 சதவீதம்) அணி 3ம் இடத்திலும், இந்தியா (33.33 சதவீதம்) 4வது இடத்திலும், வங்காளதேசம் (16.67 சதவீதம்) 5வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து 6 வது இடத்தில் முறையே வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் (சதவீதம் இன்றி) உள்ளன.

1 More update

Next Story