

அடிலெய்டு,
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியுள்ளது. பகல்-இரவு மோதலான இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.