ஆஸ்திரேலியா தொடர் வங்காளதேச மகளிர் அணியின் திறனை சோதிக்கும் – டேவிட் ஹெம்ப்

அணியுடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா தொடர் வங்காளதேச மகளிர் அணியின் திறனை சோதிக்கும் – டேவிட் ஹெம்ப்
Published on: 

சிட்னி,

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைப் பயிற்சியாளர் டேவிட் ஹெம்ப், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தங்கள் அணி உலக கிரிக்கெட்டில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய சிறந்த வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.

55 வயதான டேவிட் ஹெம்ப், வங்கதேச மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது இரண்டு ஆண்டு பணிக்காலத்தை ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து தொடங்குகிறார். பிரிஸ்பேனில் அணியுடன் இணையும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் முறையாக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் செயல்பட உள்ளார்.

வங்காளதேச அணியுடன் மீண்டும் இணைவது குறித்து ஹெம்ப் கூறுகையில், அணியுடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் இருப்பதால் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.அணியின் சூழல் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், வீராங்கனைகளுடன் ஏற்கனவே பணியாற்றியிருப்பதால் அணியின் செயல்பாடு மற்றும் சூழல் குறித்து ஓரளவு அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com