பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து

கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோத இருந்தன.
பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா-இலங்கை ஆட்டம் மழை காரணமாக ரத்து
Published on

13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் நடப்பு சாம்பியனான அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருந்தது. இந்த நிலையில் கனமழை பெய்ததால் டாஸ் போடுவதற்கு முன்பே போட்டி ரத்து செய்யப்படுவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com