அணியில் இன்னும் பல விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது: ஆஸ்திரேலிய அணி கேப்டன்

இங்கிலாந்து 8.5 ஓவர்களில் அணி 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
அணியில் இன்னும் பல விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது: ஆஸ்திரேலிய அணி கேப்டன்
Published on: 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும். 2-வது ஆட்டத்தில் இங்கி லாந்தும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது.

'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி. இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 16.5 ஓவர்களில் 108 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாம் ஹார்பர் 26 ரன்னும், ஜேக் பிராசர் மெக்குர்க் 22 ரன்னும் எடுத்தனர். சொந்த மண் ணில் 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு சிட்னியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் III ரன்கள் எடுத்ததே குறைந்தபட்சமாக இருந்தது. இங்கிலாந்த தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜாமி ஓவர்டான் 5 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த போது, 3 முறை மழையால் ஆட்டம் தடைபட்டதால் 2 முறை ஓவர்கள் குறைக்கப்பட்டது. கடைசியாக 16 ஓவர்களில் 93 ரன் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை நோக்கி ஆடிய இங்கிலாந்து 8.5 ஓவர்களில் அணி 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. பில் சால்ட் 5 ரன்னிலும், கேப்டன் ஹாரி புரூக் 9 ரன்னிலும், அனூரின் டொனால்டு 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாம் பான்டன் 10 ரன்னுடனும், ஜோர்டான் காக்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் அள்ளிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜாமி ஓவர்டான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அத்துடன் சர்வதேச 20 ஓவர்போட்டியில் 5 விக்கெட் எடுத்த 2-வது இங்கிலாந்து பவுலர் என்ற சிறப்பையும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அண கள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை நடக்கிறது.

தோல்வி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சேல் மார்ஷ் கூறியதாவது,

“முதலில், இங்கிலாந்து அணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் கடந்த இரண்டு போட்டிகளிலும் எங்களை விட மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். எங்கள் அணியில் இன்னும் பல விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

நாங்கள் போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றாலும், இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்திருந்தாலும், இந்த வீரர்கள் குழுவின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. இந்த அணியில் சர்வதேசப் போட்டிகளில் அதிக அனுபவம் இல்லாத இளம் வீரர்களும் இருக்கிறார்கள். அதேநேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இது ஒரு சிறந்த வீரர்கள் குழு. இவர்கள் திறமையான இளம் வீரர்கள். தற்போது தங்களுடைய கிரிக்கெட் பயணத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 12 மாதங்களில் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். என தெரிவித்தார்.

X